கழிவு இல்லாத கடற்கரைகளாக மாற்ற நடவடிக்கை !
Saturday, October 5th, 2019சர்வதேச கடற்கரைகள் தூய்மைப்படுத்தும் தினத்துக்கு இணையாக கடற்படை மேற்கொள்கின்ற கடற்கரைகள் தூய்மைப்படுத்தும் திட்டங்களில் மற்றொரு திட்டம் அண்மையில் தென் கிழக்கு கடற்படை கட்டளை மையமாக கொண்டு இடம்பெற்றது.
அதன்படி தென் கிழக்கு கடற்படை கட்டளை மூலம் பாணம இருந்து 03 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாணம களப்பு வரையான கரையோரப் பகுதி தூய்மைப்படுத்தும் திட்டத்தை பாணம மத்திய கல்லுரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்புடன் நடத்தப்பட்டது.
இயற்கை காரணங்கள் மற்றும் மனித நடவடிக்கைகள் காரணமாக பெரிதும் மாசுபட்ட இந்த கடற்கரையை கடற்படையின் அர்பணிப்பு காரணமாக கழிவு இல்லாத கடற்கரைகளாக மாற்ற முடிந்தது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ், அனைத்து கடற்படை கட்டளைகளும் உள்ளடக்கி நாட்டின் கடலோரப் பகுதிகள் அழகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. மேலும் இவ்வாரான நடவடிக்கைகள் மூலம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும் கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது
Related posts:
|
|