கலையமுதனின் தந்தையாருக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!

காலஞ்சென்ற அமரர் அண்ணாமலை தம்பிராசாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சார்த்தி இறுதி அஞ்சலி செலுத்தினார்.
தொண்டமனாறு பிரதான வீதியிலுள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றைய தினம் (16) சென்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சார்த்தி இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தமது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டனர்.
காலஞ்சென்ற அண்ணாமலை தம்பிராசா DD தொலைக்காட்சியின் கலைஞரான தம்பிராசா கலையமுதனின் தந்தையார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
நேரடி வரி அறவீட்டை 60 வீதம் குறைப்பதே உத்தேச வருமான வரி சட்டமூலத்தின் நோக்கம் - அமைச்சர் மங்கள !
பாடசாலை சுற்றாடலில் விவசாய உற்பத்தி - கல்வியமைச்சின் செயலாளர்!
சுங்க தொழிங்சங்க போராட்டம் தொடர்கின்றது!
|
|