கணினி கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு: தபால் திணைக்களம் பாதிப்பு!

நாடு முழுவதும் தபால் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக தபால் சேவைகளை முன்னெடுப்பதில் தடை ஏற்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த ஐந்து நாட்களாக தபால் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் கோளாரு ஏற்பட்டுள்ளதாக அந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் கே.எம்.சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
இதனால் நாடு முழுவதுமுள்ள 653 தபால் அலுவகங்களிலும், 3410 உப தபால் அலுவலகங்களிலும் கணனி ஊடாக கடமைகளை முன்னெடுக்கும் ஊழியர்களுக்கு தடை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரை எந்தவித தீர்வுகளும் கிடைக்கபெறவில்லை என கே.எம்.சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படவில்லையாயின் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
Related posts:
|
|