கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ரயில் சேவை?

Wednesday, September 4th, 2019


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வியாங்கொடை வரையில் புதிய ரயில் பாதையொன்றை நிர்மாணிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கொழும்பு நகருக்கு வராமல், ரயிலில் வியாங்கொடை ஊடாக கண்டி, பதுளை, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய பிரதேசங்களுக்கு செல்ல முடியும்.

இவ்வாறான ரயில் பாதையொன்றை அமைக்கும் சாத்தியங்கள் குறித்து ஆராய்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை ரயில்வே திணைக்களம் மேற்கொண்டுள்ளதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: