கஞ்சிபான இம்ரானுக்கு 6 வருட கடூழிய சிறை!

கஞ்சிபான இம்ரானுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 6 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
5.300 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டிற்காகவே அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் நேற்று (23) விசாரணைக்கு வந்த போது, பிரதிவாதியான கஞ்சிபான இம்ரான் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
கஞ்சா வைத்திருத்தல் மற்றும் கஞ்சா கடத்தியமை போன்ற 2 குற்றச்சாட்டுகளுக்காக தலா 3 ஆண்டுகள் வீதம் 6 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மாளிகாவத்தை பகுதியில் 5.300 கிலோ கிராம் கஞ்சா வைத்திருந்தமை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டில் கஞ்சிபான இம்ரான் மீது 2018 செப்டம்பர் 13 ஆம் திகதி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|