ஏப்ரல் 21 தாக்குதல்: 64 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
Saturday, August 31st, 2019ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
நுவரேலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமையகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 12ஆம் திகதி வரையான விளக்கமறியல் உத்தரவினை பிறப்பித்தார்.
Related posts:
டெங்கு ஒழிப்பு வாரம் மீண்டும் பிரகடனம் - அமைச்சர் ராஜித சேனாரத்ன!
அரச நிறுவனங்களில் பிரசாரங்களை மேற்கொள்ளல் முழுமையாக தடை - தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பி...
தொழில்நுட்ப விடயங்களின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் - அரசியல் விடயங்களை சம்பந்தப்படுத்தக்க...
|
|