ஏப்ரல் 21 தாக்குதல் – விசாரணை அறிக்கை சட்ட மா அதிபரிடம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

Friday, August 16th, 2019


ஏப்ரல் 21  தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்து அந்த அறிக்கையை விரைவில் சட்ட மா அதிபருக்கு கையளிக்க குற்ற விசாரணை திணைக்களம் எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேரக தெரிவித்தார்.

கண்டி பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் –

ஏப்ரல் 21  தூக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சகலரும் தற்சமயம் கைது செய்யப்பட்டுள்ளது. அதற்கு மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்கியவர்கள் தற்சமயம் கைது செய்யப்பட்டு வருவதாகவும் தொவித்தார்

விசாரணைகளுக்கு இன்னும் சற்று காலம் தேவை எனவும், எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் குறுகிய காலத்தில் குற்ற விசாரணை திணைக்களத்தினால் பல தகவல்களை வெளிக்கொண்டு வர முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.கண்டி எசல பெரஹராவை சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம்.

ஐந்து கும்பல் பெரஹராக்களையும், ஐந்து ரந்தோலி பெரஹராக்களையும் வெற்றிகரமாக நடத்தக் கூடியதாக இருந்தது. மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலில் பாதுகாப்புத் திட்டங்க்ள அமுலாகின. அதற்கு முப்படையினரின் ஒத்துழைப்பு கிடைத்தது. தேசிய பாதுகாப்பு சிறப்பாக இருப்பதை எடுத்துக் காட்டக்கூடிய சிறந்த உதாரணமாக எசல வைபவம் பூர்த்தியான விதமாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related posts: