எனது பெயரை பயன்படுத்த வேண்டாம் – கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

Friday, October 4th, 2019


தேர்தலில் தமது பெயரை பயன்படுத்த வேண்டாம் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் காலத்தில் தனது பெயரைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகளும் பல்வேறு தரப்பினரும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இவ்வாறு போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்வதனை அனைவரும் தவிர்த்து கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு சாதக நிலைமை ஏற்படும் வகையில் எனது பெயரை பயன்படுத்தி பிரச்சாரம் நடத்தப்படுகின்றது.

சமூக ஊடகங்களில் எனது பெயரைப் பயன்படுத்தி இவ்வாறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களினாலும் உருவாக்கப்படும் முகநூல் பதிவுகள் மற்றும் ஏனைய சமூக ஊடகப் பிரச்சாரங்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கியைடாது.

எனது பெயரையும் எனது புகைப்படத்தையும் பயன்படுத்தி பிரச்சாரம் செய்ய வேண்டாம். அது மிகவும் அநீதியான செயற்பாடு.

பல்வேறு தேவைகளுக்காக பல்வேறு அரசியல் தலைமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் அது அவர்களுக்கு நான் வழங்கும் ஆதரவாக அர்த்தப்பட்டு விடாது என கூறியுள்ளார்.

Related posts: