எதிர்வரும் 15 ஆம் திகதிவரை அதிபருக்கு விளக்கமறியல்!

Friday, October 4th, 2019


கைது செய்யப்பட்ட யாழ் இந்துக் கல்லூரி அதிபர் சதா நிமலனை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவால் கடந்த 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட யாழ் இந்துக் கல்லூரி அதிபரை நேற்று(3) கொழும்பு உயர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts: