எதிர்வரும் வெள்ளிக்கிழமை தெரிவுக்குழுவில் ஜனாதிபதி சாட்சியம்!

Wednesday, September 18th, 2019


நாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை விசாரணை செய்யும் நாடாளுமன்ற தேரிவுக் குழு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சாட்சியத்தை பதிவு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தகவலை தெரிவுக்குழுவின் தலைவர், துணை சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் சாட்சியப்பதிவு இடம்பெறும் என குறிப்பிட்ட அவர் குறித்த அமர்வில் ஊடகங்கள் அனுமதிக்கப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டுளார்.

இந்நிலையில் தெரிவுக்குழு தனது அறிக்கையை இறுதி செய்ய இன்னும் ஒரு மாத கால அவகாசத்தை நாடாளுமன்றத்தில் கோரவுள்ளதாகவும் குமாரசிறி தெரிவித்துள்ளார்.

அத்துடன் செப்டம்பர் 20 என்பது தெரிவுக்குழுவின் இறுதி நாள் என்றும், ஆனால் இப்போது 20ம் திகதி ஜனாதிபதியிடமிருந்து சாட்சியங்களை பதிவு செய்ய வேண்டும் என்பதால் அறிக்கையை இறுதி செய்ய போதிய அவகாசம் இல்லாத காரணத்தால் , நாடாளுமன்றத்தில் கால நீட்டிப்பு கோர உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பான பிரேரணை இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ,புதிய காலக்கெடு முடிவதற்குள் அறிக்கை இறுதி செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவுக்குழுவின் தலைவர், துணை சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: