உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டு 18 வருடங்கள் !

Wednesday, September 11th, 2019


அமெரிக்காவின் நியூயோர்க்கில் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டு இன்றுடன் 18 வருடங்களாகின்றன.

2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி தீவிரவாதத்தின் கோர விளைவுகளை உலகம் அறிந்துகொண்ட நாள் 2001ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி காலை 8.45 மணி அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தின் மைய பகுதியில் அமைந்திருந்த இரட்டை கோபுரத்தில் உள்ள உலக வர்த்தக மையம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

யாரும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் அமெரிக்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 767 வகை விமானம் ஒன்று 20,000 கலன் அளவுள்ள எரிபொருளுடன், வர்த்தக மையத்தின் வடக்கு கோபுரத்தின் மீது மோதியது. இதன் விளைவாக உடனடியாக நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

எதிர்பாராத விபத்து என்று எண்ணி, இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போதே, முதல் தாக்குதல் இடம்பெற்று சரியாக 18 நிமிடங்கள் கழித்து மற்றொரு போயிங் 767 வகை விமானம் தெற்கு கோபுரத்தின் மீது மோதியது. இதன் விளைவாக பெரும் வெடிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் மொத்த அமெரிக்காவையே அதிர வைத்தது.

அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பழிதீர்க்க, அமெரிக்காவில் 4 விமானங்களைக் கடத்திய அல்கொய்தா தீவிரவாதிகள் அவற்றில் இரண்டு விமானங்களை நியூயோர்க்கில் இருந்த இரட்டை கோபுரம் மீது மோதச் செய்தனர்.

இந்த தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட 19 பேரில் 15 பேர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


 பிரபல நடிகர் கலாபவன் மணி காலமானார்
நேபாளத்தின் ஆபத்தான பனி ஏரி வடியச்செய்யப்பட்டது!
தீப்பற்றிக் கொண்டது யாழ் பெரியபுலவு மாகாவித்தியாலயம்!
அமெரிக்காவில் “எச் 4” விசா இரத்து: 1 இலட்சம் வெளிநாட்டினர் பாதிப்பு!
சிறார்கள் கல்வியுடன் விளையாட்டுத்துறையிலும் சாதிப்பவர்களாகத் திகழவேண்டும் – ஈ.பி.டி.பியின் நல்லூர் ப...