உலக போர் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய நாட்குறிப்பு..!

Sunday, September 15th, 2019

கடந்த 1942 ஆம் ஆண்டு ஹிட்லரின் தலைமையிலான நாசி படையினரால் சுட்டு கொல்லப்பட்ட 18 வயதான ரீனியா ஸ்பைகல் என்ற யூத பெண் ஒருவரின் நாட்குறிப்பு 70 வருடங்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்டுள்ளது

இதுவரை காலமும் இவரின் நாட்குறிப்பு நியூயோக்கில் உள்ள வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்ததாக அவரது குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக புகழ்பெற்ற ‘பென்குயின்’ பிரசுரகர்த்தாக்கள், இந்த நாட் குறிப்பில் காணப்படும் சகல உண்மை விடயங்களையும் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

700 பக்கங்களை கொண்ட இந்த நூலில் 1939 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற சம்பவங்களை சித்தரிப்பதுடன் ரீனியா மறைந்திருந்த போது சுற்றிவளைப்பு ஒன்றின் போது அவர் கைது செய்யப்பட்டமை போன்ற விடயங்கள் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிட்லரின் காலப்பகுதியில் ஏராளமான யூதர்கள் காணாமல் போன சம்பவங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘நிழலின் பின்னால் இளம் பெண்ணின் வாழ்க்கை’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலை அன்னி பிராங் என்ற நூலாசிரியர் எழுதியுள்ளார்.

இரண்டாவது உலக மகாயுத்த காலப்பகுதியில் நாசி படைகளால் மேற்கொள்ளப்பட்ட கொடூர ஆட்சியின் போது இடம்பெற்ற, இதுவரை வெளிப்படுத்தப்படாத சம்பவங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன

Related posts: