உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!

Monday, August 5th, 2019


கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகிறது.

இன்று ஆரம்பமாகும் குறித்த பரீட்சை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாடு தழுவிய ரீதியில் இரண்டாயிரத்து 678 பரீட்சை மத்திய நிலையங்களில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். 315 பரீட்சை இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்திட்யசகருமான றுவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் பரீட்சை தொடர்பில் மாணவர்கள் கொண்டிருந்த அழுத்தத்தை குறைப்பதற்கு 3 மணித்தியாலங்களை கொண்ட வினாப்பத்திரங்களுக்கு விடையளிப்பதற்காக மேலதிகமாக 10 நிமிடங்கள் வழங்கப்பட்டடிருந்தது.

இந்த ஏற்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் . சமீபத்தில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் துணையுடன் பொலிஸ் மற்றும் இராணுவ ஒத்துழைப்புக்கு மத்தியில் பரீட்சைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன இதனை கருத்தில் கொண்டு பரீட்சார்த்திகள் 30 நிமிடத்துக்கு முன்னர் பரீட்சை நிலையத்துக்கு சமூகமளிப்பது பொருத்தமானதாகும்.

இவ்வாறு செய்வதன் மூலம் பரீட்சை ஆரம்பிக்கும் தருணத்தில் வருகை தருவதன் மூலம் பதற்ற நிலைக்கு உள்ளாவதை தவிர்துக்கொள்ள முடியும்.

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள் மத்தியில் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களும் பரீட்சைக்கு தோற்றுவதற்கான வசதிகள் இருப்பதாக பிரதி பரீட்சை ஆணையாளர் எம்.ஜீவராணி தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்கு தேசிய அடையாள அட்டைஇ செல்லுபடியான சாரதி அனுமதி பத்திரம் அல்லது செல்லுபடியான கடவுச்சீட்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சமர்பிப்பதன் மூலம் பரீட்சார்த்திகள் தனது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

இது தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்நோக்கும் பாடசாலை பரீட்சார்த்திகள் அதிபர் மற்றும் வலயக்கல்வி பிரதி பணிப்பாளரினால் ஆள் அடையாளம் உறுதி செய்யப்பட்ட 2 புகைப்படத்துடன் பரீட்சைக்கு தோற்ற முடியும்.

இதே போன்று பரீட்சைக்கான குறிப்பிட்ட ஆள் அடையாளத்தை உறுதி செய்ய முடியாத தனிப்பட்ட பரீட்சார்த்திகள் கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளரினால் உறுதிசெய்யப்பட்ட 2 புகைப்படங்களுடன் பரீட்சைக்கு தோற்ற முடியும்.

Related posts: