இலங்கை தொடர்பில் கவலையடைந்த ஐ.நா பொதுச் செயலாளர்!

Tuesday, August 20th, 2019


இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கவலையடைவதாக, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசின் கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஐநா. பொதுச் செயலாளர் சார்பில் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவரிடம் இலங்கை விவகாரமும் கேட்கப்பட்டது. இதற்குப் பதில் வழங்கிய அவர்,

இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம், ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிக்கையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எமது தரப்பில், இந்த நியமனம் குறித்து நாங்களும் கவலையடைகிறோம்.

ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கைகளில், நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பணியாளர்களும், மிகஉயர்ந்த மனித உரிமை தரங்களுக்கு அமைய இருக்க வேண்டும் என்ற விடயத்தில், ஐ.நா உறுதியுடன் உள்ளது.

ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் அனைத்து இலங்கை சீருடை பணியாளர்களும் விரிவான மனித உரிமைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றார்.

முன்னதாக இலங்கையில் போர்க்குற்றவாளி இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டமையை குழப்பநிலையை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: