இலங்கையில் 70 சதவீதமாக குறைந்துள்ள தற்கொலை முயற்சி – உலக சுகாதார அமைப்பு!

Wednesday, September 11th, 2019

மிகவும் ஆபத்தான பூச்சுக்கொல்லி மருந்துகள் தொடர்பில் விதிமுறைகளை அமுல்படுத்தியதன் மூலம் இந்நாட்டில் தற்கொலை மரணங்களை நூற்றுக்கு 70 சதவீதம் குறைக்க முடிந்துள்ளதாக உலக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கை மூலம் கடந்த 10 ஆண்டுகளில் மாத்திரம் இந்நாட்டில் 93 ஆயிரம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

உலக தற்கொலைத் தடுப்பு தினமான இன்று அறிக்கை ஒன்றை வௌியிட்டு உலக சுகாதார சபை இதனை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் சுமார் 8 இலட்சம் பேர் தற்கொலை செய்துக் கொள்வதன் மூலம் உயிரிழப்பதாகவும், உலக அளவில் நூற்றுக்கு 79 சதவீதமான தற்கொலை மரணங்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளிலேயே இடம்பெறுவதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தற்கொலைக்காக அதிக அளவில் பயன்படுத்துவது, பூச்சிக்கொல்லி மருந்துகளே என சுட்டிக்காட்டியுள்ள உலக சுகாதார சபை, 2020 ஆம் ஆண்டளவில் தற்கொலை வீதத்தை நூற்றுக்கு 10 சதவீதமாக குறைப்பதே தமது திட்டம் என குறிப்பிட்டுள்ளது.

Related posts: