இலங்கையில் வேகமாக பரவும் மலேரியா!

Tuesday, September 17th, 2019


இலங்கையில் மீண்டும் மலேரியா நோய் தீவிரமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் 5 மலேரிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்டுள்ள 5 நோயாளியும் தம்பதிவ யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டில் இருந்து மலேரியா நோய்த் தொற்று இலங்கையில் ஒழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் நாடு முழுவதும் மலேரியா நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக தடுக்க வேண்டும்.

இந்த வருடத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் 28 பேர் மலேரியா நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். ஆனால் இவர்கள் அனைவரும் அண்மையில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகள். அவர்கள் ஒரே காலப்பகுதியில் இந்தியாவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட பக்தர்களாகும்.

இதனால் மலேரியா நோய்த் தொற்று பரவுவதனை கண்டுபிடிக்க விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது

Related posts: