இலங்கையில் அறிமுகமாகும் சூரியசக்தி முச்சக்கர வண்டி!

இலங்கையில் முதல் முறையாக சூரிய சக்தியில் இயங்கும் முச்சக்கர வண்டி கட்டமைப்பு ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
நிலையான எரிசக்தி ஆணையம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரிய அரசாங்கத்தின் உதவியின் கீழ் சூரிய சக்தி முச்சக்கர வண்டி கட்டமைப்பு நாளையதினம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்வு அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெறவுள்ளது.
எரிபொருள் பயன்படுத்தாமல், முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டுள்ள சூரிய சக்தி கட்டமைப்பு மூலம் அதன் பட்டரி சார்ஜ் செய்யப்பட வைப்பதே இதன் சிறப்பு அம்சமாகும்.
Related posts:
புதுடில்லியில் உருவாகும் பௌத்த தூபி!
35 இலட்சம் கோடி ரூபா பெறுமதியான தங்கத்துக்கு உரிமை கோரும் ரஷ்யா!
பெரும்போக வேளாண்மைச் செய்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்புறுதி வழங்க தீர்மானம்: அமைச்சர் மக...
|
|