இலங்கையர்களின் காணிகள் மோசடியாக விற்பனை – அதிர்ச்சியில் மக்கள்!

Tuesday, September 3rd, 2019


சுமார் ஐயாயிரம் கோடி ரூபா பெறுமதியான காணி மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் வாழ்ந்து வரும் மற்றும் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் செல்வந்தர்களின் காணிகள் மோசடியான முறையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போலியான காணி உறுதி ஆவணங்களைப் பயன்படுத்தி இவ்வாறு காணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த இரண்டாண்டு காலமாக போலியான ஆவணங்களை தயாரித்து இவ்வாறு காணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதிகளவில் வெளிநாடுகளில் வசித்து வரும் செல்வந்தர்களின் காணிகளே இவ்வாறு மோசடியாக விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களினால் அந்தக் காணியை மீளப் பெற்றுக்கொள்வதில் பாரிய நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது. போலி காணி உறுதிகள் மூலம் விற்பனை செய்யப்பட்ட காணிகள் மீள் விற்பனையும் செய்யப்பட்டுள்ளதனால் பல்வேறு குழப்ப நிலைமைகள் உருவாகியுள்ளன.

வெளிநாடுகளில் வசித்து வரும் சட்டத்தரணிகள், மருத்துவர்கள், இராஜதந்திர சேவைகளில் ஈடுபட்டோர், இராணுவ அதிகாரிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் காணிகள் இவ்வாறு திருட்டுத் தனமாக வேறும் நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: