இறுதித் தீர்மானம் நாளை – மஹிந்த தேசப்பிரிய!

Saturday, August 10th, 2019

நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க காலம்சென்றதை அடுத்து, ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு புதியவரை நியமிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை மறுதினம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

விருப்பு வாக்குகளின் அடிப்படையில் பட்டியலில் அடுத்ததாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, தற்போது அந்த உறுப்புரிமையை எதிர்பார்த்து, தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிலியிருந்து விலகியுள்ளார்.

குறித்த வெற்றிடத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர் தொடர்பில் அரசியல் கட்சிகள் ஆராய்து வருகின்றன. இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் நாளைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழு கூடி ஆராய உள்ளதாக அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts: