இராணுவத் தளபதி நியமனம் தொடர்பில் யஸ்மின் சூக்கா கருத்து!

Tuesday, August 20th, 2019


இலங்கையின் இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமையானது, இராஜதந்திர விலக்குகளுடன் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் வெளிநாட்டு இராணுவங்களுக்கு உதவியளிக்கும் அமெரிக்க சட்டத்தை கேள்விக்குரியதாக்கியுள்ளது.

இந்தக்கருத்தை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் வெளியிட்டுள்ளது. இலங்கையின் இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூக்கா இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இந்த நியமனம் அண்மையில் ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைக்கு இலங்கையின் பங்களிப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற போரின் போது தமிழ் மக்களின் மீது தாக்குதல்களை மேற்கொண்டு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியமை தொடர்பில் சவேந்திர சில்வா மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

அதேவேளை ஜேவிபியின் கிளர்ச்சியின்போது சவேந்திர சில்வா மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் பொறுப்புக்கூறல் மேற்கொள்ளப்படவில்லை என்றும் சூக்கா குறிப்பிட்டுள்ளார்

Related posts: