இன்று நள்ளிரவுமுதல் நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பு !

Tuesday, September 24th, 2019


அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் அரச நிர்வாக அதிகாரிகளின் ஒன்றியம் உள்ளிட்ட 17 அமைப்புகள் இன்று நள்ளிரவுமுதல் நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளன.

வேதன முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது என்று அந்த அமைப்புகள் தெரிவித்தன.

இருப்பினும், பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சர் சமீபத்தில் ஒரு கூட்டத்தில், வேதன முரண்பாடுகளை தீர்ப்பதற்கான அமைச்சரவை அறிக்கை இன்று முன்வைக்கப்படும் என்று கூறினார். இந்தநிலையிலேயே இந்த போராட்டத்துக்கான அறிவிப்பும் வெளியாக்கப்பட்டுள்ளது.

Related posts: