இந்திய – இலங்கை கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி ஆரம்பம்!

இந்திய- இலங்கை கடற்படையினருக்கு இடையிலான, SLINEX 2019 கூட்டு கடற் போர்ப் பயிற்சி இந்தியாவின் விசாகப்பட்டினம் கடற்பகுதியில் ஆரம்பமாகியுள்ளது.
இரண்டு நாடுகளின் கடற்படைகளும் ஏழாவது ஆண்டாக இந்த கூட்டு கடற்போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன.
கடந்த 7ஆம் நாள் ஆரம்பமாகிய இந்தக் கூட்டுப் பயிற்சி, வரும் 14ஆம் நாள் வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.
இலங்கை கடற்படையின் சிந்துரால மற்றும் சுரனிமல ஆகிய போர்க்கப்பல்கள், இந்த கூட்டுப் பயிற்சிக்காக கடந்த சனிக்கிழமை விசாகப்பட்டினத்தை சென்றடைந்தன. இவற்றில் உள்ள 323 சிறிலங்கா கடற்படையினர் இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றனர்.
உலங்குவானூர்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட பரந்துபட்ட கடற்படை ஒத்திகைகளைக் கொண்டதாக இந்தக் கூட்டுப் பயிற்சி அமையவுள்ளது.
Related posts:
பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர்- பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!
புதுக்குடியிருப்பில் ஆண்களை விட பெண்களே அதிகம் - பிரதேச செயலக புள்ளிவிவரம்!
விசேட சலுகைகளை அறிவித்த ஜனாதிபதி!
|
|