அறிவியல் நகரில் பொறியியல் பீடத்தினை நிறுவியவர் டக்ளஸ் தேவானந்தா – யாழ்.மாநகர சபை முன்னாள் முதல்வர்!

Friday, October 18th, 2019

தமிழ்மக்கள் இன்றுவரை அனுபவித்து வரும் பிரச்சினைகள் எப்பவோ முற்றுப் பெற்றிருக்கும். ஆட்சி அதிகாரம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கையில் இருந்திருந்தால் என யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.

கடந்த (14) நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்சவை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் , ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் ஆதரிக்கும் முகமாக கௌரவ டக்ளஸ் தேவானந்தாவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம் மாபெரும் கூட்டத்தில் கலந்து கொள்வதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.

ஏழைகளின் தோழர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா. நம்பிக்கையுடன் டக்ளஸ் தேவானந்தா கூறும் வழிமுறையை ஆதரித்து இன்று அணிதிரண்டு வருகைதந்துள்ள அனைத்து உறவுகளுக்கும் சிரம்தாழ்;த்தி நன்றிகள்.

ஆட்சியில் கடந்த 4 ½ வருடங்களாக எதிர்க்கட்சியில் அவர் இருப்பதால் சொல்லொணாத்துயரங்களுக்கு ஆளாகி இருப்பது எமது உறவுகளே.

எமது மக்கள் தொடர்ந்தும் வறுமைநிறைந்தவர்களாக இருப்பதற்கு நாம் முற்றுப் புள்ளி இடவேண்டும். புலம்பெயர்ந்த நாடுகளில் எமது மண்ணில் இருந்து சென்றவர்கள் எவ்வாறு சிறப்பாக தமது நாடுகளில் வாழ்க்கிறார்களோ அதேபோன்றதொரு சிறப்பான வாழ்க்கை முறையை இங்குள்ள மக்களும் வாழ வழிவகை செய்ய வேண்டும் என்பதே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் எதிர்ப்பார்ப்பு. அதை முன்னெடுக்க அரசியல் பலம் என்பது முக்கியமான விடயம்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் சிறந்த சந்தர்ப்பத்தை எமக்கு தந்துள்ளது. எதை கூறி ஆட்சிக்கு வந்தார்களோ அதில் ஒன்றுமே இந்த நல்லாட்சியில் நிறைவேறவில்லை.

ஆனால், டக்ளஸ் தேவானந்தாவின் ஆளுமையில் தனக்கு அதிகாரம் தரப்படும் பட்சத்தில் யுத்தம் எதற்காக தொடங்கியதோ அதற்கான நிரந்தர தீர்வு, யுத்தம் நடந்ததால் நடந்த எதிர்விளைவுக்கான தீர்வு என்ற இரண்டு வகையான பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காண்பதே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கொள்கை.

அரசியல் தீர்வை பொறுத்தவரை சந்திரிக்கா ஆட்சிக்காலத்தில் 9 ஆசனங்களை பெற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி  அற்புதமான சம்ஸ்டிக்கு ஒத்த அரசியல் தீர்வை கொண்டு வருவதற்கு சந்திரிக்கா ஆட்சி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் தங்கியிராத போதும் முக்கியமானவர்களாக இருந்தார்கள்.

ஆனால், துரதிஸ்டவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியினரும் அத்தீர்வுத் திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சியுடன் எதிர்த்து நின்று எரித்ததுடன், பாதயாத்திரையும் சென்றார்கள். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருப்போர் பலர் இதற்கு முக்கிய காரணகர்த்தாக்களாக இருந்தனர்.இதனை எதிர்த்தவர்கள் அதற்கு மாறாக எந்த தீர்வை தமிழ் மக்ககளுக்கு பெற்றுத் தந்திருக்கின்றார்கள்.

இன்று மாகாண ஆட்சிமுறைமை எதிர்த்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் புத்திரனுக்கு ஆதரவு கொடுக்க பேரம் பேசுகின்றோம் என்கிறார்கள். அந்த பேரம் பேசலில் எந்த வெளிப்படை தன்மையும் இல்லை.

கடந்த ஆட்சியில் ஒரிரிரு பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மாவட்டம் மாவட்டமாக வடமாகாணத்தில் செய்திருந்த வேலைத்திட்டங்கள் யாவரும் அறிந்ததே.  இதில் வேலைவாய்ப்பு பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு தனது அரசியல் அதிகாரத்திற்கு அப்பால் பல இலட்சம் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி அவர்களின் வீடுகளில் ஒளியேற்றியமை குறிப்பிடக் கூடிய விடயம்.

40 வருடமாக நீண்டகால கனவான பொறியியல் பீடத்தினை அறிவியல் நகரை மீட்டெடுத்து தமிழர்கனவை நிறைவேற்றியதை இதில் நினைவுபடுத்துகின்றேன்.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணக்க அரசியலை மேற்கொண்டு எமது பிரதேச இளைஞர் யுதவிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுத்தார்.எந்த சந்தர்ப்பத்திலும் எமது மாகாணத்திற்குரியவர்கள் தவிர வேறெவரினதும் நியமனத்தை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. நடந்ததும் இல்லை.

இன்று அரசுக்கு முண்டு கொடுப்பவர்களின் நல்லாட்சியில் என்ன நடக்கின்றது என்பதை நான் கூறி அறியவேண்டியதில்லை.இவ்வாறு பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ச வெல்வது உறுதி என்பதை வெளிப்படை இந்த வெற்றியில் தமிழர்களாகிய நாமும் பங்குதாரர்களாக விளங்க வேண்டும். உங்கள் வாக்கு எமக்கான அரசியல் பலம். வெல்வோம் என உறுதிபூண்டு எண்ணியவை இனிதே நிறைவேற மொட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து கோட்டபாய ராஜபக்சவை வெற்றி காண வைப்போம் என்றும் தெரிவித்தார்.

Related posts: