அர்ஜுன் மகேந்திரன் தொடர்பிலான விண்ணப்பப் படிவம் சட்ட மாஅதிபரால் கையளிப்பு!

Wednesday, September 4th, 2019


மத்திய வங்கியின் பிணைமுறி ஊழலுடன் தொடர்புடைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு ஒப்படைக்கும் விண்ணப்பத்தை சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு அதிகாரபூர்வமாக கையளித்துள்ளார்.

அர்ஜுன் மகேந்திரனை சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு தேவையான உறுதிப்படுத்தலை வழங்கும் நோக்கத்துடனேயே இந்நாடு கடத்தல் விண்ணப்பத்தை சட்ட மாஅதிபர் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை கைது செய்வதற்காக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பிடியானையொன்றை இன்டர்போல் ஊடாக கடந்த ஆகஸ்ட் 9 ஆம் திகதி நிரந்தர நிரோதாய நீதிமன்றம் பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: