அரச நிறுவனங்களின் தலைவர்களது கொடுப்பனவை கட்டுப்படுத்த விசேட வர்த்தமானி அறிவிப்பு!

Thursday, January 16th, 2020


அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை 100,000 ரூபா வரை கட்டுப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர இதனை வெளியிட்டுள்ளார். 2020 ஜனவரி 13ம் திகதியிடப்பட்டு இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய, மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண ஆளுநர்கள் மற்றும் அரச நிறுவன தலைவர்கள் ஆகியோருக்காக இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அரச செலவீனத்தை குறைக்கும் நோக்குடன் இந்த திட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி அரச நிறுவன தலைவர்களுக்கான மாதாந்த எரிபொருள் 150 லீற்றர்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts: