அரச ஊழியர்களின் நலன்களை மேம்படுத்தி வினைத்திறனான சேவை பெறப்படும் – ஜனாதிபதி!

Saturday, August 17th, 2019


நாட்டிலுள்ள அனைத்து அரச ஊழியர்களும் சிறந்த மன நிறைவுடன் சேவையாற்றுவதற்குத் தேவையான சூழல் முக்கியமானது எனவும், அதனை உருவாக்குவதே தமது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரிகளுக்கான நலனோன்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் திருமணமாகாத உத்தியோகத்தர்களுக்கு மருதானையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத்தொகுதியினை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (16) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

சகல அரச அதிகாரிகளும் தமது அலுவலக கடமைகளில் மாத்திரமன்றி தனிப்பட்ட வாழ்க்கையை வெற்றிகொள்வதற்கு தேவையான வசதிகளையும் வழங்குவதனூடாக உயர்ந்த பட்ச, வினைத்திறனான சேவையை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

Related posts: