அரசாங்க அதிகாரிகள் மீது மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கை எனது ஆட்சியில் இருக்கக் கூடாது – ஜனாதிபதி!
Wednesday, January 1st, 2020அரசாங்க அதிகாரிகள் மீது மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கையும் கோவமும் தனது ஆட்சியில் இருக்கக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அன்றாட செயற்பாடுகளில் அரச அதிகாரிகள் தமது கடமைகளை சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். போக்குவரத்து அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
அரச சேவை தொடர்பில் மக்களின் நம்பிக்கையை மீண்டும் உறுதி செய்வது அனைத்து அரசாங்க ஊழியர்களின் பொறுப்பாகும்.
சட்டத்தை மீறி ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவர்களை சட்டத்திற்கு முன்னர் கொண்டுவர வேண்டும். அது புலனாய்வு பிரிவு மற்றும் குற்ற விசாரணை திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அரசாங்க ஊழியர்களுக்கு தராதரம் பாராமல் தண்டனை வழங்க வேண்டும். அவ்வாறாவர்களுக்கு இனி ஒரு போதும் அரச சேவையில் இணைவதற்கு சந்தர்ப்பம் வழங்க கூடாது என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
|
|