அனலைதீவு போக்குவரத்து சேவையை இடைநிறுத்தியது இலங்கை போக்குவரத்து சபை – பொதுமக்கள் பெரும் பாதிப்பு!

Thursday, October 31st, 2019


அனலைதீவு மக்களின் போக்குவரத்து தேவைகளை நிவர்த்தி செய்துவந்த இலங்கை போக்குவரத்து சேவைக்கு சோந்தமான பேருந்து கடந்த 5 நாட்களாக சேவையில் ஈடுபடாது நிறுத்தப்பட்டமையால் அனலைதீவு மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

தொழில் நூட்ப கோளாறு காரணமாக கடந்த தீபாவளி தினத்தன்றிலிருந்து இடைநிறுத்தப்பட்ட குறித்த பேருந்தின் சேவைகள் இன்னமும் சீர் செய்யப்படாதுள்ளது. அது தொடர்பில் துறைசார் தரப்பினரிடம் பொதுமக்கள் முறையிட்டிருந்தும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதுள்ளது. எனவே இது தொடர்பில் துறைசார் தரப்பினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பேருந்து சேவை கடந்த ஆட்சிக்காலத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியால் அப்பகுதி மக்களின் போக்குவரத்து தேவைகளுக்கென பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: