அதற்கு காரணம் பிரதமர் ரணிலா? – குழப்பத்தில் அதிகாரிகள்!

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கையை பல வருடங்களாக ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கத் தவறியதால் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்க முடியும் என்ற தர்க்கம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசியல் அமைப்பின் 48வது பிரிவுக்கு அமைய பிரதமருக்கான பணியை நிறைவேற்றாத குற்றத்தில் இந்த நடவடிக்கையை எடுக்க முடியும் என்பதை ஜனாதிபதியிடம் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை எல்லை நிர்ணய விவகாரம் குறித்த உச்ச நீதிமன்ற வியாக்கியானமும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சஜித் பிரேமதாசவை புதிய பிரதமராக நியமிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் பரவியிருக்கும் நிலையிலேயே முன்னாள் பிரதம நீதியரசர் இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|