அடுத்த 24 மணித்தியாலத்திற்குள் 100 மி.மீ மழை வீழ்ச்சி!

Thursday, October 3rd, 2019


நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதிக்குள் 100 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாக கூடும்.

நாட்டில் மேற்கு, சப்ரகமுவ மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, அநுராதபுரம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் இன்று மாலை மற்றும் இரவு நேரங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள விஷேட வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதியில் இந்த பிரதேசங்களில் 100 மி.மீ அளவிற்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும். இடி மின்னல் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts: