அடுத்தமாத இறுதிக்குள் ஓய்வூதியக்காரர்களுக்கு நிலுவை – அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார!

Thursday, August 1st, 2019

அடுத்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் சகல ஓய்வூதியக்காரர்களது ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பான நிலுவைகள் அனைத்தும் செலுத்தி முடிக்கப்படும் என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் 50 சதவீதமான ஓய்வூதிய நிலுவைக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். மொனராகலை மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற 19 ஆவது சத்யேக்ஷனய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சகல ஓய்வூதியக்காரர்களுக்கும் அக்ரஹார காப்புறுதியை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts: