அச்சுறுத்தல்கள் தொடர்கிறது – ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர்!

Friday, September 20th, 2019


மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் இலங்கையில் தொடர்வதாகவும், அது வருத்தமளிப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினது 42ஆவது அமர்வில் அவர் முன்வைத்துள்ள அறிக்கையில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

செயற்பட்டாளர்கள் அச்சுறுத்தப்படுதல், கண்காணிக்கப்படுதல் போன்ற நிலைமைகள் இலங்கையில் தொடர்கின்றன.

குறிப்பாக மனித உரிமைப் பேரவையின் மாநாடு இடம்பெறும் காலப்பகுதியில் அவ்வாறான நிலைமைகள் அதிகம் நிலவுகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.