ஹோட்டல்களில் திருமண வைபவங்களை நடத்த இன்றுமுதல் அனுமதி – சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு!

Monday, June 1st, 2020

இலங்கையில் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த இன்றுமுதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் ஹோட்டல்களில் மூன்றில் ஒரு பங்குடையவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்குள் 1.5 மீற்றர் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி அறிவுருத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை வழங்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் , அவர் தெரிவித்தார்.

அந்தவகையில், ஹோட்டல் ஊழியர்கள், பயண நிறுவனங்கள், சுற்றுலா முகவர் மற்றும் சுற்றுலாவைச் சார்ந்த மற்றவர்கள் இந்தக் கொடுப்பனவைப் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்று பரவலையடுத்து நிகழ்வுகள் மற்றும் வைபவங்கள் அனைத்தும் சுமார் 2 மாதங்களுக்கு மேலாக நிறுதி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றினால் அதன் பிரதிபலன் எப்போதேனும் இந்நாட்டிற்கு உரித்தாகும் என்ற நம்ப...
அதிக அளவில் காணிப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் மாவட்டமாக கிளிநொச்சி - மாவட்ட அரச அதிபர் தெரிவ...
நீர்த்தேக்கங்கள், குளங்கள், கால்வாய்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனர்நிர்மாணப் பணிகள் குறித்து இரண்ட...