ஹெலிகொப்டர்கள் மூலம் வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை!

Wednesday, May 15th, 2019

வன்முறைகளை கட்டுப்படுத்த ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்படவிருப்பதாக விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வன்முறைகள் தொடர்பில் தகவல்கள் கிடைத்ததும் அந்தப் பிரதேசங்களுக்கு உடனடியாக ஹெலிகொப்டர்களை அனுப்பி வன்முறையாளர்கள் தொடர்பான காட்சிகளை வானிலிருந்தவாறே பதியவும் ஹெலி மூலம் துருப்புக்களை இறக்கி நிலைமையை கட்டுப்படுத்தவும் விமானப் படைத் தளபதி தீர்மானித்துள்ளதாக கூறினார்.

Related posts:


மிக அவசர தேவையை தவிர ஏனையவர்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அனுமதி பத்திரம் வழங்க வேண்டாம் - ஜனாதிப...
அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் பங்கேற்பு – ஜனாதிபதி ...
கடன் முகாமைத்துவ அறிவு மிகக் குறைவு - அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து கடனைப் பெற முடியாத வகை...