ஹெரோயினுடன் கைதான ஈரானியர்களை தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி!

Tuesday, March 26th, 2019

தெற்கு கடற்கரைப் பகுதியில் 100 கிலோ கிராம் ஹெரோயினுடன் கைதான 09 ஈரானியர்களையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரும் கடற்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த நபரகள் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: