ஹெய்ட்டி நிலநடுக்கத்தில் 300 இக்கும் அதிகமானோர் பலி: உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மஹிந்தராஜபக்ச இரங்கல்!

Sunday, August 15th, 2021

கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹெய்ட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மரணித்தவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது அனுதாபங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இது தொடர்பில் பதிவொன்றினை இட்டுள்ளார்.

அவ்வாறு சோகத்தில் உள்ள ஹெய்ட்டி மக்களுடன் இலங்கை ஒன்றாக பயணிக்கும் என அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹெய்ட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 304 பேர் பலியானதோடு 1,800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்காரணமாக வைத்தியசாலைகள், விருந்தகங்கள் மற்றும் மதஸ்தலங்கள் உள்ளிட்ட பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

அத்துடன் ஹெய்ட்டியில் ஒரு மாதத்திற்கு அவசர காலநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: