ஹிஸ்புல்லாவிற்கு பணம் கிடைத்தமை தொடர்பில் மத்திய வங்கியால் விசாரணை செய்ய முடியாது!

Saturday, July 27th, 2019

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவிற்கு 2017 ஆம் ஆண்டிற்கு முன்னர் பணம் கிடைத்த விதம் தொடர்பில் புதிய அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட முடியாது என இலங்கை மத்திய வங்கியின் அந்நிய செலாவணித் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.ஆர் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டொக்டர் இந்திரஜித் குமாரசாமி, தனது சாட்சியங்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related posts: