ஹிஷாலினியின் சரீரம் இரண்டாவது பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது!

Friday, July 30th, 2021

டயகம மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சரீரத்தை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா நீதவானின் பிரசன்னத்துடன், ஹிஷாலினியின் சரீரத்துக்கு இரண்டாவது பிரேத பரிசோதனையை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர்கள் குழாம் முன்னிலையில் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தோண்டி எடுக்கப்பட்ட சரீரம், பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இரண்டாவது பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிவந்த ஹிஷாலினி கடந்த 3 ஆம் திகதி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: