ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு 97 மில்லியன் அமெரிக்க டொலர்! 

Tuesday, January 16th, 2018

ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்காக சீன மேர்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் 97 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இலங்கை துறைமுக அதிகாரசபையிடம் இரண்டாம் கட்ட  முதலீடாக கையளித்துள்ளது.

இந்த இரண்டாம் கட்ட கொடுப்பனவுடன்  மொத்தமாக 389.4 மில்லியன் டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது. இறுதி கட்ட முதலீடு ஐந்து மாதங்களில் வழங்கப்படும்.

இலங்கையின் பொருளாதாரத்தை இந்த முதலீடுகள் மேலும் வலுப்படுத்தும்  என அதிகார சபையின் தலைவர் பராக்கிரம திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த  துறைமுக அபிவிருத்தி அரச தனியார் கூட்டுத் திட்டமாக முன்னெடுக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் இதன் வர்த்தக நடவடிக்கைகள் குறித்த சீன கம்பனியிடம்ஒப்படைக்கப்பட்டன. அதேவேளை முதலாம் கட்ட முதலீடாக இலங்கை அரசாங்கத்திற்கு 292 மில்லியன் டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: