ஹம்பாந்தோட்டையில் அமெரிக்க கடற்படை கப்பல்!
Thursday, March 9th, 2017ஐக்கிய அமெரிக்க பசுபிக் கட்டளைக்குச் சொந்தமான ‘போல் றிவர்’ எனும் அமெரிக்க கடற்படை கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு நேற்று வருகை தந்த இந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர். குறித்த ‘போல் றிவர்’ கப்பல் இம்மாதம் 18ஆம் திகதி திரும்பவள்ளது குறிப்பிடத்தக்கது.
குறித்த கப்பலில் வருகைதந்த அமெரிக்கா, அவுஸ்திரேலியா, மற்றும் ஜப்பான் நாட்டு கடற்படை வீரர்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மையப்படுத்தி நடைபெறவுள்ள பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017 நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.
குறித்த கப்பலில் வருகைதந்த கடற்படை வீரர்கள் இலங்கை கடற்படை வீரர்களுடன் இணைந்து ‘பாதுகாப்பு மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தலில் பெண்களின் வகிபாகம்’ எனும் தொனிப்பொருளில் திட்டமிட்ட நிகழ்ச்சிகள் உட்பட மருத்துவ சிகிச்சை, பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் புனரமைப்பு செய்தல், தொழில் நிபுணர்களின் நிபுணத்துவ பரிமாற்றம், சமூக உறவுத் திட்டங்கள், போன்ற பல நிகழ்ச்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளனர்.
மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண செயற்திட்டம் தெற்கு ஆசியாவில் முதல் முறையாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். குறித்த செயற்திட்ட முயற்சியானது அரசினுடைய இயங்குதிறனை இலங்கை கடற்படை ஏனைய நாட்டு கடற்படையுடன் இணைந்து நெருக்கடி சூழ்நிலைகளுக்கு பதிலளிக்கும் வகையில் விளக்கங்களுடனான நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற உள்ளது.
Related posts:
|
|