ஹம்சிகா படுகொலை : திசைமாறும் கொலை வழக்கு விசாரணை?

Wednesday, March 1st, 2017

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அனுப்பப்பட்ட செய்திகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் பொலிஸாருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த சம்பவத்துடன் முஸ்லிம் இளைஞருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவரை பொலிஸார் தேடிவருவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இவ்வாறு வெளியான செய்தி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் எப்படி?, எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் விண்ணப்பம் செய்தார்.

அத்துடன் குறித்த முச்சக்கர வண்டியை நீதிமன்றில் ஒப்படைக்காது, எவ்வாறு பொலிஸார் விடுவித்தனர், என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என இதன்போது சட்டத்தரணி கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, குறித்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நீதவான் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கை குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் கூறியிருந்தார்.

இந்நிலையில், அதற்கான அவசியம் தற்போது ஏற்படவில்லை என கருதுவதனால் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸாரே தொடர்ந்தும் முன்னெடுப்பர் என நீதவான் தெரிவித்திருந்தார். கடந்த மாதம் 24 ஆம் திகதி ஊர்காவற்துறை ஊரணிப்பகுதியில் கர்ப்பிணி பெண் ஹம்சிகா படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

?????????????????????????????????????????????????????????
?????????????????????????????????????????????????????????

Related posts: