ஹட்டனில் பாரிய தீப்பரவல் –  24 வீடுகள் தீக்கிரை!

Saturday, December 29th, 2018

ஹட்டன் – டிக்கோயா போடெய்ஸ் 30 ஏக்கர் தோட்டத்தின் லயன் குடியிருப்புக்களில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணியளவில் ஏற்பட்ட குறித்த தீப்பரவல் காரணமாக குடியிருப்பில் உள்ள 24 வீடுகளும் சேதமாகியுள்ளது.

இந்த வீடுகளில் குடியிருந்த 19 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் தற்காலிகமாக போடெய்ஸ் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனினும், இதன்போது உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹட்டன் டிக்கோயா நகர சபை தீயணைப்பு படையினர், நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு படையினர் மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 3 மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பாக ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.700.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.700.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.700.160.90 (4) 625.0.560.320.160.600.053.800.700.160.90

Related posts: