ஹஜ் யாத்திரை இரத்து செய்யப்படாது – சவுதி அரேபியா அறிவிப்பு!

இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை இரத்து செய்யப்படாது என சவுதி அரேபியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இருந்தபோதிலும் ஹஜ் கடமையை நிறைவேற்ற மிக குறைவான நபா்களே அனுமதிக்கப்படுவா் என்றும் அந்த அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சவூதி அரேபியா இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளது.
முஸ்லிம் சமூகத்தினரின் வருடாந்த ‘ஹஜ்’ புனித யாத்திரை, எதிர்வரும் ஜூலை இறுதியில் தொடங்கவுள்ளது. இந்த காலகட்டத்தில், மெக்காவில் தொழுகை நடத்துவதற்காக உலகம் முழுவதும் இருந்து 20 இலட்சம் போ் சவுதி அரேபியாவுக்கு செல்வது வழமை.
இந்நிலையில், தற்போது கொரோனா நோய்த்தொற்று பிரச்சினை நிலவுகின்ற போதிலும் நிகழாண்டு ஹஜ் யாத்திரை இரத்து செய்யப்படாது என்றும் எனினும் ஹஜ் கடமையை நிறைவேற்ற மிக குறைவான நபா்களே அனுமதிக்கப்படுவா் எனவும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
அத்துடன் ஏற்கெனவே சவுதி அரேபியாவில் தங்கியுள்ள வெளிநாட்டினா் மட்டுமே ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதிக்கப்படுவா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எத்தனை போ் அனுமதிக்கப்படவுள்ளனா் என்ற விபரம் குறித்து இதுவரையில் தகவல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|