ஸ்ரீ லங்கா அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்கர் சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

Wednesday, March 24th, 2021

காலஞ்சென்ற ஸ்ரீ லங்கா அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்கர் சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பூதவுடல் வைக்கப்பட்டிருந்த கல்கிஸ்ஸ, ஸ்ரீ தர்மபாலாராமயவிற்கு இன்று (24) முற்பகல் சென்ற ஜனாதிபதி அவர்கள், தேரரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், பிக்கு மாணவர்கள் மற்றும் நிர்வாகக் குழுவினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விகாரையில் வைக்கப்பட்டிருந்த அனுதாப குறிப்பு புத்தகத்திலும் தனது கருத்தினை பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: