ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66வது ஆண்டுவிழா செப்டம்பர் 3இல் – ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாட்டுக்கும் மக்களுக்கும் 66 ஆண்டுகளாக ஆற்றிய வரலாற்றுப் பணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைவுகூர்ந்துள்ளார்.
ஊழலற்ற தூய்மையான அரசியல் இயக்கமாக கூட்டுணர்வுடன் கட்சியை கட்டியெழுப்புவதற்கான பரந்த அரசியல் செயற்திட்ட செய்தியை நாட்டுக்கு வழங்குவதற்காகவே செப்டம்பர் மூன்றாம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66வது ஆண்டுவிழா கொண்டாடப்படுவதாக தெரிவித்தார்.
கோட்டை ஜனாதிபதி மாளிகையில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவன தலைவர்களை சந்தித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.கூட்டு அரசாங்கமே மோசமான நிலையிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டு, நாடு முகம்கொடுத்த பல்வேறு சவால்களை வெற்றிகொண்டதாக குறிப்பிட்ட ஜனாதிபதி , நாட்டுக்கும், மக்களுக்குமான பணியை ஆற்றுவதற்காக கூட்டரசாங்கத்தின் பயணத்தை பலப்படுத்துவதற்கும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையும் தூய்மையான, பலமான அரசியல் இயக்கமாக கட்டியெழுப்புவதற்கும் தாம் பாடுபடுவதாக தெரிவித்தார்.
Related posts:
|
|