ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிக்காக போட்டியிடும் அமெரிக்க நிறுவனம்!

Friday, September 30th, 2016

ஸ்ரீலங்கன் விமான சேவையின் முகாமைத்துவத்தை பெற்றுக்கொள்ள அமெரிக்க உலக முதலீட்டு மேலாளர் நிறுவனம் ஒன்று விருப்பம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா பிஸ்னஸ் ஒன்லைன் வலைதளம் வெளியிட்டுள்ள தகவலுக்கு அமைய ப்லேக்ரொக் (BlackRock) மற்றும் கெப்பிட்டல் (TPG capital) ஆகிய இரண்டு நிறுவனங்களே இவ்வாறு விருப்பம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். கடன் சுமையுடன் இந்நிறுவனத்தை ஏற்றுக்கொள்வதற்கு எந்த தரப்பு இது வரையிலும் இணங்கவில்லை.அதன் காரணமாக தற்போது வரையில் ஸ்ரீலங்கன் விமான சேவையின் கடன் பணத்தை அரசாங்கத்திற்கு செலுத்த நேரிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கன் விமான சேவையினை ஏற்றுக்கொள்வதற்கு விருப்பம் வெளியிட்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்களுக்குள் சீன நிறுவனம் முன்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், குறித்த நிறுவனமும் தற்போது வரையிலும் இணக்கம் வெளியிடப்படவில்லை என கூறப்படுகின்றது.

Srilankan-1

Related posts: