ஸ்ரீலங்கன் எயர்லைன்சிற்கு சீனா ஒரு மாதகால தடை – சீனா அறிவிப்பு!.

Thursday, August 13th, 2020

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட பல பயணிகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் கொழும்பு சங்காய் சேவைக்கு சீனா தற்காலிக தடை விதித்துள்ளது

ஆகஸ்ட் ஏழாம் திகதி ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் யுஎல் 866 விமானத்தில் பயணித்தவர்களில் 22 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு;ள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே சீனா இந்த தடையை அறிவித்துள்ளது.

இதையடுத்து ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் கொழும்பு சங்காய் சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த தற்காலிக தடை ஒரு மாதகாலத்துக்கு நீடிக்கும் எனவும் சீனா அறிவித்துள்ளது.

Related posts: