ஸ்மார்ட் திறனுடன் கூடிய பிள்ளைகளை நாட்டுக்கு வழங்கும் நடவடிக்கை – இரண்டு வருடங்களில் பாடசாலைக்கல்வியில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதாக தேசிய கல்வி நிறுவகம் அறிவிப்பு!

Saturday, July 3rd, 2021

ஸ்மார்ட் எனப்படும் திறனுடன் கூடிய பிள்ளைகளை நாட்டுக்காக வழங்கும் நோக்குடன் 2023 ஆம் ஆண்டளவில் பாடசாலைக் கல்வியில் மறுசீரமைப்புக்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தேசிய கல்வி நிறுவகம் அறிவித்துள்ளது.

மேலும் இதற்காக பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்றும் தேசிய கல்வி நிறுவகம் தெரிவித்துள்ளது

அதேநேரம் குறித்த நடைமுறைகளுக்காக முதலாம், இரண்டாம், ஆறாம், எட்டாம், பத்தாம் தரங்களுக்கான பாடவிதானங்களும் மறுசீரமைக்கப்படவுள்ளதாகவும் தேசிய கல்வி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டிருக்கும் பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை 100 ஐ விடக் குறைந்த பாடசாலைகளை இம்மாதத்தில் மாதத்தில் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இது ஆரம்ப கட்டம் எனவும், சுகாதார பிரிவின் பூரண வழிகாட்டல்களைப் பின்பற்றி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகளை ஆரம்பித்த பின் வருகை தரும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி கட்டாயமானது எனவும் கல்வி அமைச்சர் ஜனாதிபதியுடன் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மாணவர்கள் எண்ணிக்கை 50 ஐ விடக் குறைந்த சுமார் ஆயிரத்து 439 பாடசாலைககள் மற்றும் 51-100 வரையான எண்ணிக்கையைக் கொண்ட ஆயிரத்து 523 பாடசாலைகளுமாக 2 ஆயிரத்து 962 பாடசாலைகளை முதல் கட்டமாக ஜுலை மாதத்தில் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: