ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!

Thursday, October 31st, 2019

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட 17 கட்சிகள் இணைந்து உருவாக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு தொடர்பிலான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கொழும்பு மன்ற கல்லூரியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் புதிய கூட்டமைப்பின் தலைவர்களாக செயற்படவுள்ளனர்.

கூட்டமைப்பின் தவிசாளர், உப தலைவர், பொதுச் செயலாளர், செயலாளர்கள் ஆகிய ஏனைய பதவிகளுக்கான உறுப்பினர்கள், தேர்தலின் பின்னர் நியமிக்கப்படவுள்ளனர்.

Related posts: