ஶ்ரீலங்கன் விமான சேவை இடைக்கால நிர்வாக சபைக்கு கைமாற்றம்!

ஶ்ரீலங்கன் விமான சேவையை புதிய இடைக்கால நிர்வாக சபை பொறுப்பேற்க உள்ளதாகவும் இந்த சபையின் தலைவராக முதலீட்டுசபையின் முன்னாள் தலைவரான திலான் விஜேசிங்க நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தற்போதைய பணிப்பாளர் சபையின் இராஜினாமா கடிதங்களை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதாகஅறிவித்தவுடன் புதிய அதிகாரிகள் செயற்பாடுகளை ஆரம்பிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போதைய பணிப்பாளர் சபையிலுள்ள ஹரேந்திர கே.பால பட்டபெந்தி தவிர்ந்த ஏனைய 6 பேரும் இராஜினாமாகடிதங்களை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா அனர்த்த காலத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 45 பில்லியன் இழப்பு - மின்வலு மற்றும் எரிச...
நாட்டில் இதுவரை 75 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது - தொற்றுந...
யாழில் சிறுமி தீடீர் மரணம் - உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையியில் அதிர்ச்சி தகவல்!
|
|